Thursday 17 March 2016

கொங்கு நாடு வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையத்தின் மன்னர்களின் திருஉருவப்பட வெளியீட்டு விழா மற்றும் மன்னர்களின் உருவப்படம் மற்றும் வரலாறு

                            

"கல்தோன்றி மண்தோன்றாக் காலமுத லாநாங்கள்

மல்வலயத் தோள்கொண்டு மாவலியர் எனஇருந்து

காவலராய் கொங்கர்களாய் கமழ்அரசு புரிநாட்டில்

தாவளம்சேர் மன்னனுந்தான் தனியரசாச் செய்ததனால்

கொங்கன்என எம்நாமம்"

"நலம்தருஞ்சீர்ப் பெருங்கீர்த்தி நிலைபெறு பாண்டியனின்

குலம்பெருக வந்துதித்த கோவேந்தர் ஐம்பிரியர்

பூவலியர் மாவலியர் பொற்புமிகும் காவலியர்


சேவகமே மிகுவேடர் செம்மைமிகு வெட்டுவர்கள்"

                          -கொங்குவேட்டுவக்கவுண்டர்கள் ...



வரலாற்று ஆய்வு மையத்தினர் ஓர் அறிமுகம்:

விற்கொடி வேட்டுவன் பீச்ச குல சரவணக்கவுண்டர்,
குதிரைபடை வேட்டுவன் கோபிநாத்கவுண்டர்,
வெள்ளை வேட்டுவராயர் கொங்கர் கோபுகவுண்டர்,
பார் போற்றும் பட்டாலி சிங்கம் ஊர்கவுண்டர் செந்தில்ராயர்,
மோகூர் காளிகாத்தான் வழக்கறிஞர் மோக்காளி கவுண்டன் பாஸ்கர்,
கூச்சந்திகுல நாயகன் மாப்பிள்ளை கவுண்டர் திண்ணபரத்,
காக்கவாடி குல காவலன் கொங்கன் பிரேம்நாத்,
பூவாணி குல வம்சத்து நாயகன் பிரசாந்த் வேளாண்,
கரைய குல சொக்கன் வம்சம் விஜி பல்லவராயர்,
செம்ப குல சக்கரவர்த்தி வசந்த் கொங்காள்வான்,    

பூலுவர் குல பேரரசன் கொங்கன் கோகுல் மன்றடியார்,

கொங்கு தலையூர் ஸ்ரீ பிரம்மசக்தி பீடம் ஸ்ரீ பிரம்ம வேங்கலன்
கி.ரவிக்குமார் மற்றும்  
பலரின் முயற்சியால் மன்னர்களுக்கு திருஉருவப்படம் 
மதுரை தெய்வாஆர்ட்ஸ் திரு.மதிப்பிற்குரிய ஓவிய ஆசிரியர் தெய்வநாதன் 
அவர்களால் திருஉருவம் கொடுக்கப்பட்டது.

விழா மற்றும்சிறப்பு விருந்தினர்கள் ஓர்

அறிமுகம் :

கொங்குநாடு வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையத்தின் மூலமாக கொங்குவேட்டுவக்கவுண்டர்கள் இன மன்னர்கள் திறுருவப்படம் 17-01-2016 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி முதல் 6 மணிவரை SINGAPOORE INTRENATINAL HOTEL கோவையில் நடைபெற்றது.வரலாற்று ஆய்வு மைய தலைவர் திரு.மதிப்பிற்குரிய பூலுவராஜன் ஐயா அவர்கள் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக காங்கேயே நாடு பட்டாலி பட்டம் ஸ்ரீ மான் அனுமந்தராயகவுண்டர் வம்சத்து  வாரிசான  V.A.வெங்கடாசலக்கவுண்டர் மற்றும் அவரது மனைவியாரும் முன்னாள் தமிழ்த்துறை  பேராசிரியையுமான சகுந்தலா அம்மையாரும் மற்றும் வடகரைநாடு அந்தியூர் அந்துவ பட்டம் ஸ்ரீ மான் சுந்தரராயர் வம்சத்து வாரிசும்,வரலாற்று ஆய்வாளருமான சந்திரசேகரராயர்  ஐயா அவர்களும் மற்றும் கொங்கு வேட்டுவக்கவுண்டர் இன வரலாற்றுப்புலி கொல்லிமழவர்,சாந்தப்படை ஆனந்தகுமார் அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மன்னர்களின் திருஉருவப்பட பெயர்கள்  பின்வருமாறு:

1.தலையூர் காளிங்க அரையர் சுந்தர பாண்டிய சோழகோன்
2.அல்லாள இளைய நாயக்கர்
3கடிய நெடு வேட்டுவன் 

4.வீர வெஞ்சமன்

5.செயங்கொண்ட சோழ கொங்காள்வான்
6.கொங்கு ராயர்

போன்ற மன்னர்களுக்கு திருஉருவப்படம் வெளியிடப்பட்டது...

திருஉவப்படமும் வரலாறும் :

1.தலையூர் காளி மன்னர் 


கொங்கு சக்கரவர்த்தி தலையூர் காளி  மன்னர் 

கொங்கு 24  நாட்டின் தலைமை நாடாம் தலைய நாடு. அத்தலைய நாட்டிற்கு தலையூர் எனும் ஊரே தலைநகராகும்.அத்தலைய நாட்டின் மாமன்னர் நம்பினோரை கைவிடாத நட்பின் இலக்கணம் போற்றும் கொங்கு தலையூர் மாமன்னர் தலையூர் காளி மன்னர்  ஆவார்.இவர் கொங்கர் இனத்தை சார்ந்தவர்.  வேட்டுவர் குலத்தை சார்ந்தவர். போரில் முரட்டுத்தனமாக தண்டேறி எறிபவர். இவருடைய வம்சத்திற்கு தண்டேறி முத்துராஜா பட்டமும்ண்டு .இவர் வேட்டுவர்களின் பாரம்பரியமான குல தெய்வமான  காளி எனப்படும் கொற்றவை எனப்படும் போர்த்தெய்வத்தை வணங்க கூடியவர். இவர் மிகச்சிறந்த காளி பக்தர் என்பதனால் வெற்றித்திலகம் நெற்றியில் இடும் பழக்கமுடையவர்.இவர் பிறந்த வேட்டுவர் குலத்தை தழைக்க வைப்பதற்காக போர்க்களத்தில் சூழ்ச்சி வலை பின்னபட்டபோது  தன்னுடைய கொற்றவை  குல தெய்வமான தலையூர் பிரம்ம காளி தேவி இடம்  வணங்கி  “சத்தியம் காக்கும் கொங்க வேட்டுவர் குல அரச வம்சம் சத்தியமாய் வெட்ட வெட்ட தழைக்கும்” என தன்னுடைய கொங்கர் படைக்கு வரம் வாங்கியவர். பொன்னர்சங்கர் கதையின் வெற்றித்திருமகன் ஆவார். 

2.அல்லாள இளைய நாயக்கர் 




அரைய நாட்டு மாவீரன் அல்லாள இளையான் 

கொங்கு 24  நாட்டில் அரைய நாட்டில் பரமத்தியில் கோட்டை கட்டி   விஜய நகர பேரரசின் கீழ் சிற்றரசராக மழகொங்கு நாட்டை ஆட்சிபுரிந்து வந்தார். விஜய நகர வேந்தரால் இவருக்கு நாயக்கர் பட்டம் கொடுக்கப்பட்டது.
இவர் மூல வேட்டுவர் குலத்தைச் சார்ந்தவர். இவர் ஜேடர்பாளையத்தில் ராச வாய்க்கால் வெட்டி அணைகட்டினார். மேலும் கொமாரபாளையம் வாய்க்கால், பொய்யேரி வாய்க்கால் போன்றவற்றையும் வெட்டியுள்ளார்.
இவர் 72 பாளையப்பட்டுக்களின் தலைமை பாளையப்பட்டுக்காரர் ஆவர். மந்திரக்கோல் வைத்து ஆட்சிபுரிந்தவர். கொல்லிக்கிரியை உடையவர். இவருடைய ஆட்சி அதிகாரம் சேலம்,ஆத்தூர்,ஆறகளூர் வரை பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது. மழகொங்கு சித்திரமேழி சபை அதிகாரம் இவரிடமே இருந்தது. இவரை “வாளரசர் மணவாளர் என்றே இவருடைய செப்பேடு கூறுகிறது. 


3.கடிய நெடு வேட்டுவன்

கோடை மலையை ஆண்ட கடியநெடுவேட்டுவன் 
கடிய நெடு வேட்டுவன் சங்ககால மன்னர்களில் ஒருவர். கோடை மலையை (இன்றைய கொடைக்கானல் மலையை) ஆண்ட மன்னர் ஆவார். இவர் வேட்டுவர் குலத்தைச் சார்ந்தவர். இவர் நாயுடன் வேட்டைக்கு செல்லும் பழக்கமுடையவர். இவர் நாய்களை தன்னுடன் எப்போதும் கூடவே வைத்திருப்பவர். கடியம் என்பது நெடுவேட்டுவனது ஊர் ஆகும். இவ்வூர் கோடை மலைக்கடியில் உள்ளது. 

       4. வீரவெஞ்சமன்  

களப்பிரர்களை புறங்கண்ட வீர வெஞ்சமன்


கொங்கு தேசத்தை ஆண்ட கொங்க மன்னர்களுள் வீர வெஞ்சமன் என்பவர் 5-ஆம் நூற்றாண்டில் வெஞ்சமாங்கூடலூரை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தவர். இவர் வேட்டுவக்கவுண்டர் இனத்தை சார்ந்தவர்.இவர் ஒரு மிகச்சிறந்த சிவபக்தர்.சேர,சோழ,பாண்டிய மூவேந்தர்களையும் பிடித்து சிறைக்கூடத்தில் வைத்த அச்சுதன்,பரசுராமன்,களப்பாலன் ஆகிய நான்கு ராஜாக்களையும் எதிர்த்து போர் செய்து வெற்றி கனிந்து சிறப்பு பெற்று வந்த வெஞ்சமன் வேட்டுவராஜக்களுடைய காணியும் பூமியும் கொங்குநாடு என கல்வெட்டு சாசனம் செய்துகொண்டார்.சமனைப்படைகளான களப்பிரர்களை புறங்கண்டு சைவத்தை கொங்குநாட்டில் நிலை நிறுத்தினார்.கொங்கேழு சிவத்தலங்களில் ஒன்றான வெஞ்சாமங்கூடலூரில் உள்ள விருகிதீஸ்வரர் எனும் சிவாலயத்தை அமைத்தார்.சோழமன்னனுக்கும்,வெஞ்சமனுக்கும் எல்லைப்பிரச்சனை இருந்தது .ஏழு முறை போர்தொடுத்து தோல்வியுற்ற சோழமன்னன் எட்டாவது முறையாக சூழ்ச்சியால் தான் இவரை வென்றான்.இவரை வென்ற சோழமன்னன் இவரின் வீரத்தை பாராட்டி நடுகல்நட்டும்,கல்வெட்டு செத்துக்கியும் வைத்துள்ளான்.இவருக்கு கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இன மக்கள் சிலையும் மணிமண்டபமும் வெஞ்சமாங்கூடலூரில் அமைத்துள்ளனர். 



5.செயங்கொண்ட சோழ கொங்காள்வான் 




முதலாம் குலத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் (கி.பி 1070 -1125)டகரை நாட்டை சிற்றரசாக இருந்து ஆட்சி செய்தவர். 
இவர் செம்ப வேட்டுவர் குலத்தை சார்ந்தவர். இவர் கொங்கு நாட்டில் முதன்முதலில் பவானி ஆற்று நீரை  குளவாற்றூர்என்ற இடத்தில் நீரைத்தேக்கி (இக்குளம் அட்டி) கால்வாய் வெட்டிய பெருமை இவரையே சாரும்.

முதலாம் குலத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் (கி.பி 1070 -1125)   55- ஆவது (1125)ஆட்சி ஆண்டில் சோழ கொங்காள்வான் கொடிவேரியில் பவானி ஆற்றுநீர் பாயும் இடத்தை அகலப்படுத்தி நீரை பெரும் கற்களை கொண்டு தேக்கி கால்வாய் வெட்டினான்.  இந்த செய்தியை  பவானி ஆற்றங்கரையில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.

கொடிவேரி அணை அமைந்துள்ள ஊரின் பெயர் குளவாற்றூர் என்பது குறிப்பிடத்தக்கது.

6.கொங்குராயர் 



மட்டுக்கடங்காத கொங்குராயர் 


கொங்கு 24 நாட்டில் மண நாட்டை ஆண்டவர் கொங்கு ராயர். இவர் வெங்கச்சி வேட்டுவர் குலத்தை சார்ந்தவர். மட்டுக்கடங்காத மண நாட்டான் என்று கூறுவார். கடவுடளிடம் “வாள்முனையில் வீரத்தை  வரமாக  வாங்கிய கொங்கு ராயன்” என அழைக்கப்படுவார். 


இவர் செங்கோல் கொண்டு ஆட்சி புரிந்தவர்.

கொங்கு நாட்டில் மைசூர் உடையார் ஆட்சி வராமல் இருக்க 

நஞ்சராயரை எதிர்த்தான். 

கொங்கு நாட்டில் உள்ள சில மன்றாடியர்கள் 

வஞ்சகத்தால் 

சூழ்ச்சியால் அவர்களின் உதவியால் விசயமங்கலத்து கண்ண பறையர் என்ற கைகூலியால்   வெட்டிக்கொல்லப்பட்டார்.




   

அவ்விழாவில்  எடுக்கப்பட்ட புகைப்படங்கள்: